மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை


மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2022 8:02 PM IST (Updated: 16 May 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மொட்டனம்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 23). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (21). இந்த தம்பதிக்கு கிருத்திக் என்ற 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் சுபாஷ் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சுபாஷ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சுபாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story