கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை


கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை
x
தினத்தந்தி 16 May 2022 10:57 PM IST (Updated: 16 May 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம், 

கல்லில் தலையை மோதி அக்காள் கணவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

கல்லில் மோதி கொலை

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஜக்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பேச்சியம்மாள். கணவன்-மனைவிக்கு இடைேய குடும்ப தகராறு இருந்து வந்தது.

இதனால் அதே ஊரை சேர்ந்த பேச்சியம்மாளின் தம்பி கருப்பசாமி(39) நேற்று முன்தினம் தனது அக்காள் கணவரான மாரியப்பனிடம் குடும்ப விஷயம் தொடர்பாக பேசி கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீெரன்று வாய் தகராறு ஏற்பட்டது. உடனே இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதில் மாரியப்பனை, கருப்பசாமி கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். கீழே விழுந்த மாரியப்பனின் தலை கல்லில் மோதி, சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார்.

கைது

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாரியப்பனின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். .

இது தொடர்பாக அப்பயநாயக்கர்பட்டி கிராம உதவியாளர் கொடு்த்த புகாரின் பேரில் கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story