உடையார்பாளையம் பகுதியில் மழை


உடையார்பாளையம் பகுதியில் மழை
x
தினத்தந்தி 17 May 2022 3:34 AM IST (Updated: 17 May 2022 3:34 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் பகுதியில் மழை பெய்தது.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதில் நேற்றுமுன்தினம் காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து, வானில் கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் உடையார்பாளையம், கழுமங்கலம், முனையதரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார் சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மணகெதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் முந்திரி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை உடையார்பாளையம் பகுதியில் சாரல் மழை பெய்தது. பின்னர் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.


Related Tags :
Next Story