லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம்
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதனின் மகன் மகாராஜன்(வயது 30). இவர் நேற்று முன்தினம் கீழப்பழுவூருக்கு சென்றுவிட்டு இரவில் அவரது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தேளூரில் தனியார் பேக்கரி கடை அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த மகாராஜனை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story