அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 May 2022 12:52 AM IST (Updated: 18 May 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி புலிப்பாறைப்பட்டியில் ஸ்ரீதேவி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் துரைப்பாண்டி என்பவர் உரிய அனுமதியின்றி பேன்சிரக பட்டாசுகளை தயாரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் சம்பவ இடத்துக்கு சென்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை பறிமுதல் செய்து துரைப்பாண்டி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story