மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.

 தொட்டியம்,மே.18-
தொட்டியம் அருகே உள்ள அலகரைஊராட்சிக்குட்பட்ட கோடியாம்பாளையம் கருப்பண்ணசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (வயது46). இவர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவிளக்குகள் மற்றும் தனியார் வீடுகளுக்குதினக்கூலி அடிப்படையில் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலை பார்த்துவந்தார்.இந்நிலையில்நேற்றுகோடியாம்பாளையம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் மின்வாரியஅதிகாரிகள் அனுமதி இல்லாமல் ஏறி பழுது பார்த்தபோது வீரப்பன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொட்டியம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் சோமசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Next Story