ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தி கலச பூஜை
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று (புதன்கிழமை) காலையில் சுத்தி கலச பூஜை நடைபெறுகிறது.
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று (புதன்கிழமை) காலையில் சுத்தி கலச பூஜை நடைபெறுகிறது.
பரிகார பூஜை
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபிஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது.
சுத்தி கலச பூஜை
இ்ந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜை, கணபதி பகவதி சேவை, தேவி பூஜை ஆகியன நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை கணபதி ஹோமத்தைத்தொடர்ந்து 8 மணிக்கு சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் போன்றவை நடக்கிறது.
ஆதிகேசவ பெருமாளுக்கு 25 கலசங்களிலும், கிருஷ்ணசாமிக்கு 9 கலசங்களிலும், அய்யப்ப சாமிக்கு ஒரு கலசத்திலும் பூஜை நடந்த பிறகு கலசாபிஷேகம் நடக்கிறது. வருகிற 25-ந் தேதி சர்ப்பபலி பூஜை நடைபெறும். கோவில் தந்திரி சஜித் சங்கர நாராயணரு தலைமையில் கோவில் பூஜைகள் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story