பட்டுக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


பட்டுக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2022 1:06 AM IST (Updated: 18 May 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய கோவை விதைச்சான்று இயக்குனர் சுப்பையா உத்தரவின்படி மதுரை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையில், விதை ஆய்வாளர்கள் அகிலா, அஜ்மல்கான், ராஜபாண்டி, முத்துராணி அடங்கிய குழுவினர் பட்டுக்கோட்டை பகுதியில் 11 தனியார் மற்றும் 6 அரசு விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விதை உரிம விவரங்கள், விதை இருப்பு, கொள்முதல் செய்த விதைகளின் விலைப்பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  தொடர்ந்து விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 22 அலுவலக விதை மாதிரிகள் சேகரித்து, விதை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் விதை சட்ட விதிகளை மீறியது தொடர்பாக ரூ.2லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 4.66 டன்கள் விதை நெல் மற்றும் இதர விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டது. ஆய்வின்போது தஞ்சை விதை ஆய்வாளர் மணிமாறன், பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர் நவீன் சேவியர் உடன் இருந்தனர்.

Next Story