26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்


26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
x
தினத்தந்தி 18 May 2022 1:14 AM IST (Updated: 18 May 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் 26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைவாக உள்ள 26 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் தலைமை தாங்கி ஊட்டச்சத்து குறைவாக உள்ள 26 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, ஆறுமுகம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனம் சக்திவேல், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் உதயா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Next Story