தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி
முள்ளிவாய்க்கால் படுகொலை 13-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சாவூர்:
முள்ளிவாய்க்கால் படுகொலை 13-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சசிகலா மலர்தூவி அஞ்சலி
இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்ந்த படுகொலையை நினைவு கூரும் விதமாக ஈழத்தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் உலகம் முழுவதும் மே 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று 13-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தையொட்டி சசிகலா தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு சென்றார். அங்கு ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள கற்சிலைகளுக்கும், தமிழ் அன்னை சிலைக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பழ.நெடுமாறன்
பின்னர் முற்றத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை பார்வையிட்டு, அவர்களின் வரலாற்றை படித்து பார்த்தார். அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் ஒவ்வொரு படங்களையும் சுட்டிக்காட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு, தியாகம் ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.
Related Tags :
Next Story