தஞ்சை பெரியகோவிலில் கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சை பெரியகோவிலில் கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர்:
உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
உலக அருங்காட்சியக தினம்
உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, இந்திய தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் கோவில் ஆய்வுத்திட்டம் (தென்மண்டலம்) சார்பில், கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சி 2 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பழமையான இடங்களை மாணவர்கள் அறிந்துக்கொள்ளும் வகையில், கோவில் கலை மற்றும் கட்டக்கலைத்துறை சார்ந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று முதற்கட்டமாக, கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் சின்னமான தஞ்சை பெரியகோவிலுக்கு விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி, தமிழ் இலக்கிய மாணவர்கள் 45 பேர் வந்தனர். அவர்களுக்கு தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் குமரன் மற்றும் பிரசன்னா ஆகியோர் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலை பற்றி எடுத்து கூறினார். அப்போது தமிழ்துறைப்பேராசிரியர்கள் அருணாச்சலம், மாரிராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொல்லியல் துறை ஏற்பாடு
தொடர்ந்து, அய்யம்பேட்டை அருகே புள்ளமங்கை ஆலந்துறை மகாதேவர் கோவில், பட்டீஸ்வரம் பஞ்சவன் மகாதேவி கோவில், கங்கைக்கொண்டசோழபுரம், மாளிகைமேடு அகழாய்வு களம், மலையடிப்பட்டி சிவ மற்றும் பெருமாள் குடைவரைக்கோவில், விசலூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல் பாண்டியர் குடைவரைக்கோவில், கொடும்பாளூர் மூவர் கோவில் ஆகிய இடங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story