ஆதர்ஷ ஆச்சார்ய விருது வழங்கும் விழா
சாரதா கல்வியியல் கல்லூரியில் ஆதர்ஷ ஆச்சார்ய விருது வழங்கும் விழா நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரியில் ஆதர்ஷ ஆச்சார்ய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜெயக்குமாரி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் டாக்டர் பிஸ்வஜித் துபாஷி மாணவி வைஷ்ணவிக்கு ஆதர்ஷ ஆச்சார்ய விருதை வழங்கினார். மேலும் பல்கலைக்கழக தேர்வில் வரலாறு பாடத்தில் முதல் இடம் பிடித்த மாணவி சிவரஞ்சனிக்கு விருது, கல்லூரியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் முதல் இடம் பிடித்த மாணவிகள் ஆகியோருக்கு விருது, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்கி சிறந்த மாணவ-மாணவிகளை உருவாக்கும் விதம் குறித்து பேசினார். விழாவில் டாக்டர் பிஸ்வஜித் துபாஷியின் துணைவியார் ஜெயகுமாரி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் யதீஸ்வரி நித்ய விவேக பிரியா அம்பா வாழ்த்தி பேசினார். இதில் கல்லூரி இணை செயலாளர் பிரம்மச்சாரணி அவ்யக்த பிரணாமாஜி, இணைப் பேராசிரியைகள், முன்னாள் மாணவிகள், மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் சாந்தி வரவேற்றார். முடிவில் இணைப் பேராசிரியை மங்களம் நன்றி கூறினார்.