விபத்தில் பள்ளி மாணவர் பலி
விபத்தில் பள்ளி மாணவர் பலி
சோழவந்தான்
சோழவந்தான் அருகே நகரியை அடுத்துள்ள வைரவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஸ்ரீதர்(14) மற்றும் அன்பு(15) ஆகிய இருவரையும் ஒரே மோட்டார் சைக்கிளில் நகரி நான்குவழிச் சாலையில் அழைத்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் ஸ்ரீதர் பலியானார். இதில் படுகாயமடைந்த அன்புவை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவக்குமார் தப்பி ஓடி விட்டார். சோழவந்தான் போலீசார் இவர்கள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தையும், தப்பி ஓடிய சிவகுமாரையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story