டிரைவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை


டிரைவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 18 May 2022 1:50 AM IST (Updated: 18 May 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

டிரைவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாமரைக்குளம்:

மாணவி கடத்தல்

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சித்துடையார் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜதுரை(வயது 21). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, 12-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பழகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 9.3.21 அன்று அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி ராஜதுரை கடத்தி சென்றதாக, மாணவியின் பெற்றோர் 10.3.21 அன்று அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராஜதுரையை போலீசார் கைது செய்தனர்.

25 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கானது அரியலூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார்.

இதில் மாணவியை பலாத்காரம் செய்ததற்காக 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதால், ராஜதுரைக்கு ெமாத்தம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ராஜதுரையை பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். 


Next Story