ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை வேலுசாமி தலைமை தாங்கினார். வட்ட தலைவர் சுந்தரராஜன் வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story