நகை செய்யும் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை
நகை செய்யும் தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமங்கலம்:
நகை செய்யும் தொழிலாளி
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 52). நகை செய்யும் தொழிலாளியான இவர் தற்போது குடும்பத்துடன் அரியலூர் காமராஜர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று தொழில்ரீதியான கடன் பிரச்சினையால் மன வருத்தத்தில் சாமிநாதன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது அண்ணன் பJewelry worker commits suicide by drinking liquidழனிவேல் என்பவரை பார்ப்பதற்காக அரியலூரில் இருந்து நாகமங்கலத்திற்கு சாமிநாதன் வந்துள்ளார். வழியில் தங்க நகைக்கு பயன்படுத்தப்படும் திராவகத்தை(ஆசிட்) வாங்கி சாமிநாதன் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பழனிவேல் வீட்டிற்கு வந்த சாமிநாதன், பழனிவேல் வீட்டில் இல்லாததால் அவரது வீட்டு திண்ணையில் படுத்துள்ளார்.
பிணமாக கிடந்தார்
மாலையில் வீட்டுக்கு வந்த பழனிவேல், திண்ணையில் சாமிநாதன் பிணமாக கிடந்ததை கண்டு, சாமிநாதனின் மனைவி கொளஞ்சியம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த கொளஞ்சியம்மாள் மற்றும் உறவினர்கள், இது குறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.