சாராய ஊறல் வைத்திருந்த தொழிலாளி கைது
சித்தோடு அருகே வீட்டில் சாராய ஊறல் வைத்திருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
சித்தோடு அருகே உள்ள நசியனூர் சித்தன் குட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 33). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் மூர்த்தி வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து
சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா மற்றும் போலீசார் மூர்த்தி வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டின் பின்பக்கத்தில் பிளாஸ்டிக் குடத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக மூர்த்தி 15 லிட்டர் ஊறல் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் மூர்த்தியை கைது செய்து, சாராய ஊறலையும் பறிமுதல் செய்தார்கள். போலீஸ் விசாரணையில் மூர்த்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
Related Tags :
Next Story