கர்ப்பிணி மாயம்
கர்ப்பிணி மாயமானார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் கொட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தேவி(வயது 22). செல்வம் சென்னையில் உள்ள ஒரு டீ கடையில் வேலை பார்த்து வருகிறார். தேவி வேப்பூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
மேலும் தேவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கடைக்கு சென்ற தேவி, அங்கு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இரவு ஆகியும் தேவி வீடு திரும்பவில்லை. இது குறித்து தகவலறிந்த செல்வம், குன்னம் போலீசில் தனது மனைவியை காணவில்லை என புகார் செய்தார். அதன்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story