எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 8:26 PM GMT (Updated: 17 May 2022 8:26 PM GMT)

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பழமையான கியான்வாபி மசூதியில், தொழுகைக்காக முஸ்லிம்கள் அங்கசுத்தி செய்யும் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக, மசூதியில் கள ஆய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்த இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு 'சீல்' வைக்க உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நேற்று காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகம்மது ரபிக் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணைத் தலைவர் முகம்மது பாருக், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். இதில் மாவட்ட தலைவர் முகம்மது இக்பால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story