மாரியம்மன் கோவிலில் ஊரணி திருவிழா


மாரியம்மன் கோவிலில் ஊரணி திருவிழா
x
தினத்தந்தி 18 May 2022 1:56 AM IST (Updated: 18 May 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவிலில் ஊரணி திருவிழா நடந்தது.

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஊரணி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.


Next Story