பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மகேஸ்வரன், பொருளாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் பதிவாளர் மருதமுத்து உள்ளிட்டோர் பேசினர். 1.1.2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மருத்துவ செலவை திரும்பப்பெற அளிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர்கள், கிராமப்புற நூலகர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் இளவரசன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.