திட்டங்களை செயல்படுத்துவதில் வேகமாக முடிவு எடுக்க வேண்டும்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு
திட்டங்களை செயல்படுத்துவதில் வேகமாக முடிவு எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்
பெங்களூரு: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சமீபத்தில் மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக மாநில அளவிலான அதிகாரிகளுடன் இன்று (நேற்று) விவாதித்தேன். அரசின் திட்டங்கள் மக்களை போய் சென்றடைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை குறித்த காலத்தில் அமல்படுத்தும்படி அறிவுறுத்தினேன்.
நிர்வாகத்தில் வேகத்தை ஏற்படுத்த வேண்டும், அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினேன். முடிவு எடுக்கும் நாட்களை குறைக்க வேண்டும். அதாவது திட்டங்களை செயல்படுத்துவதில் உயர் அதிகாரிகள் வேகமாக முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். நிர்வாக சீர்திருத்த குழு கூறியுள்ள அம்சங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story