லிங்கம்மாள் கோவில் வைகாசி திருவிழா


லிங்கம்மாள் கோவில் வைகாசி திருவிழா
x
தினத்தந்தி 18 May 2022 2:13 AM IST (Updated: 18 May 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

லிங்கம்மாள் கோவில் வைகாசி திருவிழா

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டி லிங்கம்மாள்கோவில் வைகாசி திருவிழா நடந்தது. இந்த விழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு குட்லாடம்பட்டியில் உள்ள கோவில் வீட்டிலிருந்து லிங்கம்மாள் பூஜை பொருட்களுடைய ஆபரணப்பெட்டிகள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தலைமை பூசாரி கஜேந்திரன், ரங்கன் ஆகியோர் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். உடன் லிங்கம்மாளாக ெரங்கசாமி, கருப்புசாமியாக தியாகராஜன், மலைச்சாமியாக ராஜா, கேத்ரபாலனாக பாண்டி, அழகுமலையானாக கோபால், கோமாளியாக ெரங்கசாமி ஆகியோர் வேடமணிந்து சாமியாடியபடி வந்தனர். இந்த பெட்டியுடன், பொங்கல் பானையினை பெண்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக குட்லாடம்பட்டி நாகம்மாள்கோவில், கச்சைகட்டி நீலமேகபெருமாள் கோவில் வழியாக பூச்சம்பட்டி லிங்கம்மாள் கோவிலையடைந்தது. அங்கு லிங்கம்மாள் பீடத்திற்கு சிறப்பு ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டு கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நாட்டாமை செல்வம் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story