பெண்ணை சித்ரவதை செய்த கணவருக்கு 7 ஆண்டு சிறை


பெண்ணை சித்ரவதை செய்த கணவருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 18 May 2022 2:22 AM IST (Updated: 18 May 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை சித்ரவதை செய்த கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவருடைய மனைவி முத்துலட்சுமி (45). இந்தநிலையில் கண்ணனுக்கு பிரியா (33) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். மேலும் 2-வது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியதுடன், முத்துலட்சுமியை 2 பேரும் கொடுமை செய்துள்ளனர்.
இதனால் அவர் திருச்சி கீழ புலிவார்டு சாலையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர், இதுபற்றி அவர் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி கூடுதல் மகிளா கோர்ட்டில் நீதிபதி மணிவாசகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

Related Tags :
Next Story