கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பொக்லைன் எந்திர டிரைவர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பொக்லைன் எந்திர டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
ஆந்திர மாநிலம் சத்யவேட்டை சேர்ந்தவர் வம்சி (வயது 22). பொக்லைன் எந்திர டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு சத்யவேட்டில் இருந்து கவரைப்பேட்டை அடுத்த பூவலம்பேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பூவலம்பேடு பெட்ரோல் நிலையம் அருகே கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் உள்ள திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது, சாலையில் இருந்த பள்ளத்தில் கட்டுபாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த வம்சி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story