கயததாறு அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
கயத்தாறு அருகே குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருேக குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த வியாபாரி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மீன் வியாபாரி
கயத்தாறு அருகே சிவஞானபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த வாகைகுளம் மேலக் காலணியில் வசித்து வருபவர் விசுவாசம். விவசாயி. இவரது மகன் சாமிராஜ் (வயது 42). இவரது மனைவி, மகள்கள் சிவஞானபுரத்திலுள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர் கேரளாவில் மீன்வியாபாரம் செய்து வந்தார். கேரளாவில் தங்கியிருந்து மீன்வியாபாரம் செய்து விட்டு, வாரம் அல்லது மாதம் ஒரு முறை இவர் வீட்டுக்கு வந்து செல்வாராம்.
குடும்ப பிரச்சினை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து அவர் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் மாடியில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இறந்துபோன விசுவாசத்திற்கு மகாலட்சுமி என்ற மனைவியும், செல்வலட்சுமி(23),கீர்த்தனா(21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story