ஆப்பாயில் உடைந்ததால் பரோட்டா மாஸ்டரை தாக்கிய வாலிபர்


ஆப்பாயில் உடைந்ததால் பரோட்டா மாஸ்டரை தாக்கிய வாலிபர்
x
தினத்தந்தி 18 May 2022 4:44 PM IST (Updated: 18 May 2022 4:44 PM IST)
t-max-icont-min-icon

ஆப்பாயில் உடைந்ததால் பரோட்டா மாஸ்டரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொண்டி, 
தொண்டி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருபவர் மண்மலகரை கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 40). ஓட்டலுக்கு தொண்டி அருகே உள்ள நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கவின் (வயது21) என்பவர் சாப்பிட வந்துள்ளார். அங்கு ஆப்பாயில் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீரென புரோட்டா மாஸ்டர் பிரபாகரன் அருகில் சென்று ஆப்பாயில் உடைந்து இருக்கிறது எனகூறியுள்ளார். அதற்கு அவர் வேறு ஆப்பாயில் போட்டு தருவதாக கூறியுள்ளார். இந்தநிலையில் கவின் பிரபாகரனை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பிரபாகரன் தொண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
1 More update

Next Story