வந்தவாசியில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் முனுசாமி, அஸ்வினி, ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்தையன், எம்.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாம்பட்டு கூட்டுச்சாலையில் அனைத்து அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் சாதிக்பாஷா, செய்யது, ரகமத்துல்லா, நாராயணன், மலர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story