தூத்துக்குடி டூவிபுரம் பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தூத்துக்குடி டூவிபுரம் பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 2004 - 2005-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை பொன்பாய் குணசீலி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளி தாளாளர் ஆனந்த் சாமுவேல் கலந்து கொண்டார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அகிலா, ஞானம், கிறிஸ்டோபர், சரோலின் மற்றும் ஆசிரியர்கள் ஏஞ்சலின், குணசீலி, சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
மேலும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். தங்கள் வகுப்பறைகளில் அமர்ந்து பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஆண்டுதோறும் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் உறுதி ஏற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பாக்கியராஜ், மணிகண்டன், துரை, சரவணன், செல்வராஜ், ராமச்சந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story