விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:
தென்காசியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். நிகழ்ச்சிக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வைரமுத்து தலைமை தாங்கினார். நகர தலைவர் ராசையா முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட செயலாளர் முத்துசாமி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் கணேசன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் அச்சன்புதூர் தலைவர் சம்சுதீன், மாவட்ட குழு உறுப்பினர் முருகையா மற்றும் நிர்வாகிகள் சுப்பையா, பிச்சம்மாள், கற்பகவல்லி, கதிரேசன், காளியம்மாள், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கிராம நிர்வாக அலுவலகத்தில் கொடுத்தனர்.
Related Tags :
Next Story