அரூா் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா


அரூா் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 18 May 2022 9:48 PM IST (Updated: 18 May 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

அரூா் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

அரூர்:
அரூர் அருகே உள்ள சூரநத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆற்றில் இருந்து அம்மன் பூச்சாட்டுதல் மற்றும் கரகம் பாலித்தல் நடைபெற்றது. இதனையடுத்து மாலை அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து சென்று வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story