சித்தநாயக்கன்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா


சித்தநாயக்கன்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 18 May 2022 9:49 PM IST (Updated: 18 May 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

சித்தநாயக்கன்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தநாயக்கன்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் அம்மன் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

 தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு, அலங்காரம், பூஜைகள் மற்றும் இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு பூச்சட்டி எடுத்தல் நடந்தது. மாலை 4 மணிக்கு தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

 அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து தேர்நிலையை அடைந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். 

Next Story