காரிமங்கலம் பேரூராட்சியில் சிமெண்டு் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை


காரிமங்கலம் பேரூராட்சியில் சிமெண்டு் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
x
தினத்தந்தி 18 May 2022 9:49 PM IST (Updated: 18 May 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் பேரூராட்சியில் சிமெண்டு் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.

காரிமங்கலம்:
காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு அருண் மருத்துவமனை வீதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.60 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், நகர செயலாளர் காந்தி, அவைத்தலைவர் மகாலிங்கம், கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், வக்கீல் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் கணபதி, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், ஊராட்சி தலைவர் பெரியசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகம்மாள், இந்திராணி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story