நல்லம்பள்ளியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுகூட்டம்
நல்லம்பள்ளியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், நல்லம்பள்ளி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் வீரமணி, ரங்கநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி மல்லமுத்து, எல்லப்பன், சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் நெல்லைமணி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பேசினர். இதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வக்கீல் சிவம், ஒன்றிய கவுன்சிலர் புனிதம்பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதாமுருகன், கலைச்செல்வன், பரிமளாமாதேஷ்குமார், ஊராட்சி துணைத்தலைவர் காசிலிங்கம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராசப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story