நூல் விலை உயர்வை கண்டித்து வெண்ணந்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து வெண்ணந்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 9:50 PM IST (Updated: 18 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

நூல் விலை உயர்வை கண்டித்து வெண்ணந்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

வெண்ணந்தூர்:
தமிழகத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் சார்பில் அங்குள்ள காமராஜர் சிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தற்போது 40 நம்பர் நூல் ரூ.18 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் கூடங்கள் மூடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய அரசு நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story