முயல் வேட்டைக்கு சென்ற போது மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு விவசாயி கைது


முயல் வேட்டைக்கு சென்ற போது  மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு விவசாயி கைது
x
தினத்தந்தி 18 May 2022 9:50 PM IST (Updated: 18 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளி அருகே முயல் வேட்டைக்கு சென்ற போது மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்தார். இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே முயல் வேட்டைக்கு சென்ற போது மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்தார். இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கூலித்தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே செங்கன் பசுவந்தலாவ் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு முயல் வேட்டைக்கு சென்றார். அப்போது அதேபகுதியை சேர்ந்த முத்து என்பவர் தனது நிலத்தில் நெல், தக்காளி, வாழை உள்ளிட்டவைகளை பயிர் செய்து உள்ளார்.
இதில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார். முயல் வேட்டைக்கு சென்ற நரசிம்மன் எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விவசாயி கைது
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் நிலத்தின் வழியாக சென்றனர். அப்போது நரசிம்மன் மின்வேலியில் சிக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நரசிம்மனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்த விவசாயி முத்துவை கைது செய்தனர்.

Next Story