திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா


திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா
x
தினத்தந்தி 18 May 2022 9:57 PM IST (Updated: 18 May 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார். கணிதத்துறை தலைவர் சுகுமாரன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் கவுரி உடற்கல்வி துறை ஆண்டறிக்கை வாசித்தார். 

சிறப்பு அழைப்பாளர்களாக சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம், கல்வியில் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். 
விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

முன்னதாக கல்லூரி வளாகம் மற்றும் நுழைவு வாயிலில் சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவை நடந்தது. இதில் மாணவ, மாணவிகள் ஆடி மகிழ்ந்தனர். முடிவில் கணிதத்துறை இணை பேராசிரியர் அண்ணாமலை நன்றி கூறினார்.

Next Story