பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை  இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 10:03 PM IST (Updated: 18 May 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பொள்ளாச்சி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளணை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதையடுத்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். 

இதில் முன்னாள் வக்கீல்கள் சங்க தலைர் மீரான் மொய்தீன், வக்கீல்கள் இப்ராகிம், சேதுபதி, புவனா, பிரபாகரன், மதி அம்பேத்கார், ஜாபர் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பின்னர் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், தி.மு.க., ம.தி.மு.க., ம.ஜ.க., ஆதி தமிழர் பேரவை, சி.பி.எம். உள்பட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story