கல்வராயன்மலையில் ரூ.60 லட்சத்தில் 2 மின்மாற்றிகள்


கல்வராயன்மலையில் ரூ.60 லட்சத்தில் 2 மின்மாற்றிகள்
x
தினத்தந்தி 18 May 2022 4:34 PM GMT (Updated: 18 May 2022 4:34 PM GMT)

கல்வராயன்மலையில் ரூ.60 லட்சத்தில் 2 மின்மாற்றிகள் அமைக்கும் பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள சுமார் 50 கிராமங்களுக்கு சேலம் மாவட்டம் தும்பை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பராமரிப்பு பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட மின்சார துறையினரே செய்து வந்தனர். 
இந்த நிலையில் இந்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு எடுத்தவாய்நத்தம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை  விடுத்தனர். இதையடுத்து வெள்ளிமலையில் ரூ.42 லட்சம் மதிப்பில் மின்மாற்றி அமைத்து, கருவேலம்பாடி, நொச்சிமேடு, குண்டியநத்தம், கரியாலூர், வெள்ளிமலை, கொட்டபுத்தூர், மொழிபட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கவும், மல்லிகைபாடியில் ரூ.17 லட்சம் மதிப்பில் மின்மாற்றி அமைத்து பரிகம், கல்படை, மல்லிகைப்பாடி, பரங்கநத்தம், பொட்டியம் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு  மின்சாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, வெள்ளிமலை மற்றும் மல்லிகைப்பாடியில் மின்மாற்றி அமைப்பதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். 

Next Story