இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 4:43 PM GMT (Updated: 18 May 2022 4:43 PM GMT)

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடையம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ரவணசமுத்திரம் பிரைமரி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ரவணசமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் மதரசாவில் நடைபெற்றது. ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் இக்பால் தலைமை தாங்கினார். துணை தலைவர் சாகுல் ஹமீது காசியார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பீர்முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி பொருளாளர் பீரப்பா வரவேற்றார். பிரைமரி பொருளாளர் பீர் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென்காசி, நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும். திருமலையப்பபுரம் முதல் கோவிந்தப்பேரி வரையிலான சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும், ரவணசமுத்திரம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கடையம் ஒன்றிய செயலாளர் காதர் மைதீன் நன்றி கூறினார்.

Next Story