2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
அலிபாக் விடுதியில் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.
அலிபாக்,
அலிபாக் விடுதியில் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.
4 பேரின் உடல்கள் மீட்பு
ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் தனியார் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 11-ந் தேதி புனேயை சேர்ந்த 31 வயது வாலிபர், 25 வயது பெண் ஆகியோர் 2 குழந்தைகளுடன் அங்கு அறை எடுத்து தங்கினர்.
வெகுநேரமாக அவர்கள் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் 2 குழந்தைகள் படுக்கையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விஷம் கொடுத்து கொலை
இது பற்றி தகவல் அறிந்த அலிபாக் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை கடிதம் எதுவும் சிக்காததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
3 வயதுயுடைய சிறுவன், 5 வயதுயுடைய சிறுமி ஆகிய 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பின்னர் அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
கள்ளக்காதல் ஜோடி
இதற்கிடையில் புனே அருகே சிக்ராப்பூர் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி காணாமல் போனதாகவும், மற்றொரு புகாரில் தனது கணவர் காணாமல் போனதாகவும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் தற்கொலை செய்து கொண்ட 2 பேர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் விசாரித்தில் அவர்கள் குணால் கெய்க்வாட் (வயது29), பிரியங்கா இங்லே (25) மற்றும் அப்பெண்ணின் குழந்தைகளான பக்தி இங்லே (5), மவுலி இங்லே (3) எனவும், அவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்பதும் தெரியவந்தது. இருப்பினும் இவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story