பரமத்திவேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 17 பேர் மீது வழக்கு


பரமத்திவேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 17 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 May 2022 10:16 PM IST (Updated: 18 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 17 பேர் மீது வழக்கு

பரமத்திவேலூர்:
வேலூர் பேரூராட்சிக்குட்பட்ட வெட்டுக்காட்டு புதூர் 3-வது வார்டு அன்பு‌ நகரில் வேலூர் பேரூராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடவும், பணிகளை விரைந்து முடித்து தரக்கோரி வெட்டுக்காட்டு புதூர் அருகே வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் திடீரென டேங்கர் லாரியை குறுக்கே நிறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 17 பேர் மீது வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story