திருச்செங்கோடு அருகே பா.ஜ.க. நிர்வாகி தாக்குதல் வழக்கில் மேலும் 3 பேர் கைது
திருச்செங்கோடு அருகே பா.ஜ.க. நிர்வாகி தாக்குதல் வழக்கில் மேலும் 3 பேர் கைது
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே பிரிதி ஊராட்சி அத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். பா.ஜனதா நிர்வாகியான இவர், இவருடைய தாய் சரஸ்வதி ஆகியோரை சிலர் தாக்கியதாக திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக திருச்செங்கோடு அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (வயது 24), முருகன் (47), பரமேஸ்வரன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன் (58) என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story