மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, மேல் சிறுவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் மணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பிரதம மந்திரியின் வீடு கட்டும் தி்ட்டம், சிமெண்ட் சாலை அமைத்தல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளர்கள் ராஜகோபால், சித்ரா, சபான்கான், பணி மேற்பார்வையாளர் சாமுவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரமசிவம், செல்வராஜ், சாந்தி முனியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story