பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி


பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
x
தினத்தந்தி 18 May 2022 4:47 PM GMT (Updated: 18 May 2022 4:47 PM GMT)

பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடக்கிறது.

பர்கூர்:
பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பர்கூரில் தங்கத்தின் தரம் அறிய நகை மதிப்பீட்டாளர் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள “தங்க நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்” பயிற்சி பர்கூர் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கத்தை கணக்கிடும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்கத்தை உரைக்கல்லில் உரசி தரம் அறியும் முறை, உரசாமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவர்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகுகடை, ஆபரணக்கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பயிற்சி சான்றிதழ் வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துக்கொள்ள தகுதியுடையதாகும். இதில் சேர 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சில் சேர விரும்புவோர் முன்னதாக முதல்வர் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் பர்கூர் என்ற முகவரியில், புகைப்படத்துடன் நேரில் வந்து விண்ணப்பத்துடன் பயிற்சி கட்டணமாக ரூ.4,544 செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story