ராயக்கோட்டையில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்-அதிகாரிகள் ஆய்வு
ராயக்கோட்டையில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டையில் சூளகிரி சாலையில் உள்ள மஜித் தெருவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 25 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட மேற்கூரை தற்போது பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர். கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் குழந்தைகளை வேறு பகுதிக்கு மாற்றவும் வேண்டுகோள் விடுத்தனர். ஆய்வின்போது அங்கன்வாடி மைய பணியாளர் சசிகலா உடன் இருந்தார்.
Related Tags :
Next Story