பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் முப்பெரும் விழா இன்று நடக்கிறது
பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் முப்பெரும் விழா இன்று நடக்கிறது .
பர்கூர்:
பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) ஆண்டு விழா, விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா நடக்கிறது. இயற்பியல் துறை தலைவர் கண்ணகி வரவேற்கிறார். முதல்வர் பிரமிளா தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக ஏ.பி.சி. புரூட்ஸ் நிர்வாக இயக்குனர் விஜயன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகிறார். முப்பெரும் விழாவையொட்டி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதேபோல் வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) கல்லூரியில் பட்டமளிப்பு வழா நடக்கிறது. இதில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை கல்லூரி முதல்வர் அனுராதா கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story