ஓசூரில் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி-30 கிலோ மூட்டை ரூ.200-க்கு விற்பனை


ஓசூரில் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி-30 கிலோ மூட்டை ரூ.200-க்கு விற்பனை
x
தினத்தந்தி 18 May 2022 10:18 PM IST (Updated: 18 May 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முள்ளங்கி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விளைச்சல் அதிகரிப்பாலும், தொடர் மழையின் காரணமாகவும் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் மழையின் காரணமாக செடிகளிலேயே முள்ளங்கிகள் அழுகி வருகின்றன. கடந்த வாரம் 30 கிலோ எடை கொண்ட முள்ளங்கி மூட்டை ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் விலை குறைந்து ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story