இடைத்தேர்தலில் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும் - துரைமுருகன் பேச்சு
இடைத்தேர்தலில் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
வேலூர்,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமதுசகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்தை, அவரது தந்தையும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகன் எம்.எல்.ஏ., அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் அறிமுகப்படுத்தி பேசினர்.
கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது:-
எனது மகன் இந்த மண்ணின் மைந்தன். ஒரிஜினல் வேலூர்காரர். அமெரிக்காவில் சென்று படித்துள்ளார். நன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவர். நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் நன்றாக தெரியவேண்டும். அல்லது இந்தி தெரிய வேண்டும். தெரியாவிட்டால் நாடாளுமன்றம் செல்ல முடியாது. இங்குள்ள பஸ் நிலையத்தில் தான் இருக்க வேண்டும்.
நான் எனது மகனுக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறேன். அவர் கூறும் வாக்குறுதிகளுக்கு நான் ஜாமீன் கொடுக்கிறேன். நான் 10 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்.
காரணம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது தான். அதேபோல் எனது மகனும் நிறைவேற்றுவார். வேலூர் கோட்டை மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். சி.எம்.சி. அருகே இட நெரிசலுக்கு தீர்வு காணப்படும். வேலூர் மாநகராட்சியின் வரி உயர்வு ரத்து செய்யப்படும். இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 24 மணி நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சி கவிழும். அதற்கான வேலையை நான் செய்து விடுவேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கையை பிடித்து இழுத்துச் சென்று பதவி ஏற்க வைப்பேன்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்ததொகுதியின் வளர்ச்சிக்கு ரூ.50 லட்சம் கொடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல அணைக் கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story