பா.ஜ.க. சொந்த சாதனைகளை கூறாமல் ஏன் எதிர்க்கட்சிகளை குறை கூறி கொண்டிருக்கிறது? அகிலேஷ் கேள்வி
பா.ஜ.க. சொந்த சாதனைகளை பற்றி எடுத்து கூறாமல் ஏன் எதிர்க்கட்சிகளை குறை கூறி கொண்டிருக்கிறது? என அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்னோ,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
அங்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியொன்றில், மக்கள் நிலையான வேலைவாய்ப்பினை விரும்புகிறார்கள். ஒரு காவலரை (சவுகிடார்) அல்ல என தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் பிறரின் துரதிர்ஷ்ட நிலைக்கு காரணம் பா.ஜ.க. என அக்கட்சியை தாக்கி பேசிய அகிலேஷ், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி கூறினார்.
பா.ஜ.க. தனது பேரணியில் ஏன் எதிர்க்கட்சிகளை குறை கூறி கொண்டுள்ளது? தனது 5 வருட ஆட்சியில் எந்த நல்ல சாதனைகளும் அவர்களிடம் இல்லையா? மக்களின் கோபம் மற்றும் தோல்வி பயம் ஆகியவற்றால், பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பிரசாரம் செய்வதனை தவிர்த்து வருகின்றனர். மக்களிடம் மன்னிப்பு கோரி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story